/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மகளிர் ஆணைய அலுவலகத்தில் இலவச சட்ட சேவை மையம் மகளிர் ஆணைய அலுவலகத்தில் இலவச சட்ட சேவை மையம்
மகளிர் ஆணைய அலுவலகத்தில் இலவச சட்ட சேவை மையம்
மகளிர் ஆணைய அலுவலகத்தில் இலவச சட்ட சேவை மையம்
மகளிர் ஆணைய அலுவலகத்தில் இலவச சட்ட சேவை மையம்
ADDED : ஜூலை 21, 2024 01:02 AM
சென்னை:சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹால் கட்டடத்தின் முதல் தளத்தில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய அலுவலகம் செயல்படுகிறது.
கடந்தாண்டு ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து, 3,388 புகார்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இவற்றில், 439 புகார்கள் நேரடி விசாரணை வழியே முடிக்கப்பட்டு, பெண்களுக்கு தேவையான நிவாரணம் கிடைத்துள்ளது. மற்ற மனுக்கள் தொடர் நடவடிக்கையில் உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் 2,107 மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேசிய மகளிர் ஆணையம், 2022ம் ஆண்டு முதல் அனைத்து மாநில மகளிர் ஆணையங்களுக்கும் நிதியுதவி செய்து, படிப்படியாக இலவச சட்ட சேவை மையத்தை அமைத்து வருகிறது.
தமிழ்நாடு மகளிர் ஆணையம், 2 லட்சம் ரூபாயை, தேசிய மகளிர் ஆணையத்திடம் பெற்று, மாநில இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து, சேப்பாக்கத்தில் இலவச சட்ட சேவை மையத்தை அமைத்துள்ளது.
இம்மையத்திற்கு மாநில இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு வழியாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். திங்கள் முதல் வெள்ளி வரை, பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இம்மையம் செயல்படும்.