/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஜி.எம்., சதுரங்க போட்டியில் கவுதம், ரியா ஹமால் முதலிடம் ஜி.எம்., சதுரங்க போட்டியில் கவுதம், ரியா ஹமால் முதலிடம்
ஜி.எம்., சதுரங்க போட்டியில் கவுதம், ரியா ஹமால் முதலிடம்
ஜி.எம்., சதுரங்க போட்டியில் கவுதம், ரியா ஹமால் முதலிடம்
ஜி.எம்., சதுரங்க போட்டியில் கவுதம், ரியா ஹமால் முதலிடம்
ADDED : ஜூன் 25, 2024 12:34 AM

சென்னை,
ஜி.எம்., செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில செஸ் போட்டி, தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் உள்ள, ஆல்பா சர்வதேச மற்றும் மெட்ரிக் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
போட்டியில், 8, 10, 13, 25 வயதுக்குட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 150 சிறுமியர் உட்பட 600 சிறுவர்கள் உற்சாகமாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில், ஏழு சுற்றுகள் வீதம், மாலை வரை போட்டிகள் நடந்தன.
இதில், 8 வயதில் சிறுவரில் திருவள்ளூரைச் சேர்ந்த சிவின், சிறுமியரில் செங்கை தியா ஜெயின் ஆகியோர் முதலிடங்களை வென்றனர்.
பத்து வயதில், நாமக்கல் சாய்வின் ஆதித்யா, கரூர் ஸ்ரீயுக்தா; 13 வயதில் செங்கை கவுதம் மற்றும் அலிகி ரியா ஹமால் ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.
அதேபோல் 25 வயதில், நெல்லை மணிகண்டன், சென்னை தர்ஷனா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 25 இடங்களை பிடித்த சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தாம்பரம் மாநகராட்சியின் மூன்றாவது மண்டல தலைவர் ஜெய பிரதீப் சந்திரன், செங்கை மாவட்ட சதுரங்க சங்கத்தின் செயலர் புவனேஷ்வரி பரிசுகளை வழங்கினர்.