/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்கட்டண உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம் மின்கட்டண உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 21, 2024 02:16 AM

பிராட்வே:மின்கட்டண உயர்வை கண்டித்து, த.மா.க., தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:
மாதம் ஒரு முறை மின்கட்டணம் என தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022, செப்., மாதம், 26.73 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்தாண்டு, வீட்டு உபயோக மின்கட்டணம், 2.18 உயர்த்தப்பட்டது; சிறு, குறு தொழிற்சாலைகள், இதர பயன்பாட்டிற்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.
மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் சாமானிய மக்கள், சிறு,குறு தொழில் செய்வோர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை வாபஸ் பெற வேண்டும்.
தி.மு.க., அரசு, பெண்களுக்கு 1000 ரூபாய் என வலது கையில் கொடுத்து, இடது கையில் மின்கட்டண உயர்வு என பிடுங்க நினைக்கிறது. இது தான் திராவிட மாடல் அரசின் தந்திரம்.
நீர் மின்சாரம், அனல் மின்சாரம், புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தவறியது தி.மு.க., அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.