/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலையில் உலா வந்த 15 மாடுகள் பறிமுதல் சாலையில் உலா வந்த 15 மாடுகள் பறிமுதல்
சாலையில் உலா வந்த 15 மாடுகள் பறிமுதல்
சாலையில் உலா வந்த 15 மாடுகள் பறிமுதல்
சாலையில் உலா வந்த 15 மாடுகள் பறிமுதல்
ADDED : ஜூலை 21, 2024 02:15 AM

திருநின்றவூர்:திருநின்றவூர் நகராட்சியில், சாலையில் உலா வரும் மாடுகளுக்கு தொடர்ந்து அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த 13ம் தேதி முதல் ஒரு வாரமாக சி.டி.எச். சாலை, பிரகாஷ் நகர் மற்றும் திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதியில் மாடு பிடிக்கும் பணி நடந்தது. இதில், 15 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை, திருநின்றவூர் நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் கட்டி வைத்து பராமரிக்கப்பட்டது. பின் உரிமையாளரிடம் இருந்து, ஒரு மாட்டிற்கு தலா 1,000 வீதம் 15,000 வசூலித்து பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
அபராதம் கட்டி திரும்ப பெறாத மாடுகள் ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.