ADDED : ஜூலை 18, 2024 12:38 AM

அண்ணா நகர் மண்டலம், அயனாவரம் பகுதியில், குருவப்பா மேஸ்திரி தெரு உள்ளது. இந்த பகுதியில் ரேஷன் கடைகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில், அரசுக்கு சொந்தமான காலிமனையில், பல ஆண்டுகளாக அத்துமீறி சிலர் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால், கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, குப்பையை அகற்றி துாய்மைப்படுத்த வேண்டும்.