/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஊராட்சி பொறியாளர் நியமிப்பதில் குழப்பம் கட்டட அனுமதி பெறுவதில் இழுபறி நீடிப்பு ஊராட்சி பொறியாளர் நியமிப்பதில் குழப்பம் கட்டட அனுமதி பெறுவதில் இழுபறி நீடிப்பு
ஊராட்சி பொறியாளர் நியமிப்பதில் குழப்பம் கட்டட அனுமதி பெறுவதில் இழுபறி நீடிப்பு
ஊராட்சி பொறியாளர் நியமிப்பதில் குழப்பம் கட்டட அனுமதி பெறுவதில் இழுபறி நீடிப்பு
ஊராட்சி பொறியாளர் நியமிப்பதில் குழப்பம் கட்டட அனுமதி பெறுவதில் இழுபறி நீடிப்பு
ADDED : ஜூலை 18, 2024 12:39 AM
சென்னை, சென்னை பெருநகர் பகுதியில், 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 22 ஊராட்சிகள், சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டில் வருகின்றன. இங்கு, 10,000 சதுர அடி வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க, உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியங்களிலும் நகரமைப்பு வல்லுனர்கள், பொறியாளர்கள் இல்லை என்பதால், கட்டட அனுமதி வரைபடங்களை ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து தற்காலிக அடிப்படையில் அலுவலர்கள் அனுப்பப்படுகின்றனர். இதில், உள்ளாட்சி அமைப்புகள் பொறியாளர் பணியிடங்களை உருவாக்காத நிலையில் சி.எம்.டி.ஏ., நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்தது.
ஒப்பந்த முறையில் கட்டட அனுமதி வரைபடங்கள் கோப்புகளை சரிபார்க்க, வெளியில் இருந்து பொறியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், 140 பொறியாளர்களை சி.எம்.டி.ஏ., தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது. இவர்களை பணியமர்த்தி கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சி.எம்.டி.ஏ., பரிந்துரைத்தது.
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
சி.எம்.டி.ஏ., பரிந்துரைக்கும் பட்டியலில் உள்ள பொறியாளர்களை பணியமர்த்த ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியங்களின் மன்ற கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இவர்களுக்கான ஊதியம் வழங்கவும் தீர்மானம் வாயிலான ஒப்புதல் தேவை.
இது விஷயத்தில், ஊராட்சிகளும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களும் மவுனமாக இருப்பதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் ஊரக வளர்ச்சி துறையுடன் பேச்சு நடத்தி சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் விரைவில் உரிய முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான், ஊராட்சி பகுதிகளில் வீடு கட்டுவோருக்கு விரைவாக அனுமதி கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.