ADDED : ஜூன் 21, 2024 12:36 AM
புழல், வழிப்பறி, கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கிருபாகரன், 28, அஜீத்குமார், 26, செல்வா, 30, நரேந்திரகுமார், 27, ஆகியோர், கடந்த மாதம், புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு, போலீஸ் காவலுடன் சென்றனர். மாலையில் மீண்டும் சிறைக்கு திரும்பினர்.
அப்போது, சிறை போலீசார், அவர்களை சோதித்தனர். அவர்கள் தங்களது உள்ளாடையில், 60 கிராம் கஞ்சா, போதைக்காக பயன்படுத்த வைத்திருந்த 16 'நைட்ரோவிட்' மாத்திரைகள் சிக்கின. 'கைதிகளுக்கு மாத்திரை மற்றும் கஞ்சா ஆகியவை, யார் மூலம் கிடைத்தது?' என, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.