Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இலவச கண் சிகிச்சை  பரிசோதனை முகாம்

இலவச கண் சிகிச்சை  பரிசோதனை முகாம்

இலவச கண் சிகிச்சை  பரிசோதனை முகாம்

இலவச கண் சிகிச்சை  பரிசோதனை முகாம்

ADDED : ஆக 06, 2024 12:47 AM


Google News
மடிப்பாக்கம்,

மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியுடன் இணைந்து, பம்மல் சங்கரா கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை முகாம், வரும் 11ல் நடக்கிறது.

மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம், 6வது தெருவில் நடக்கும் இம்முகாமில் சிகிச்சை பெற விரும்புவோர், ஆதார் அட்டை மற்றும் அதன் நகல் எடுத்து வர வேண்டும்.

தவிர, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இதய நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்வோர், தாங்கள் உட்கொள்ளும் மருந்து மற்றும் மருத்துவ சீட்டை அவசியம் எடுத்து வர வேண்டும்.

கண்புரை நோய் உள்ளவர்களுக்கு, போக்குவரத்து, தங்கும் வசதி மற்றும் உணவுடன், சங்கரா கண் மருத்துவமனையில் விழிலென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்படும். முகாம், அன்றே சிகிச்சைக்கு செல்ல தயாராக வர வேண்டும்.

அறுவை சிகிச்சை முடிந்த பின், முகாம் நடந்த இடத்திற்கே மீண்டும் அழைத்து வந்து விடப்படுவர்.

விபரங்கள் அறிய 97109 10542 மற்றும் 82209 57937ஆகிய மொபைல் எண்களில் தெரிந்து கொள்ளலாம் என, முகாம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us