/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கட்டட தொழிலாளர்களிடம் கூலி ரூ.2.25 லட்சம் மோசடி கட்டட தொழிலாளர்களிடம் கூலி ரூ.2.25 லட்சம் மோசடி
கட்டட தொழிலாளர்களிடம் கூலி ரூ.2.25 லட்சம் மோசடி
கட்டட தொழிலாளர்களிடம் கூலி ரூ.2.25 லட்சம் மோசடி
கட்டட தொழிலாளர்களிடம் கூலி ரூ.2.25 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 07, 2024 12:33 AM
புளியந்தோப்பு, பீஹாரைச் சேர்ந்த அனருள் என்பவர், புளியந்தோப்பில் வசிக்கிறார். கூலி ஆட்களை வரவழைத்து ஒப்பந்த அடிப்படையில் கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மே 6ம் தேதி முதல், கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் ஆர்.ஆர் புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு, கட்டட வேலைக்காக கூலி ஆட்களை அனுப்பி வைத்துள்ளார்.
கூலி ஆட்களை வேலைக்கு அனுப்பிய வகையில் 2.25 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் பாக்கி உள்ளது.
தர வேண்டிய பாக்கியை கேட்ட போது ராஜ்குமார் மிரட்டுவதாக புளியந்தோப்பு காவல்நிலையத்தில் அனருள் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.