ADDED : ஜூன் 07, 2024 12:34 AM
அம்பத்துார், அம்பத்துார், மாதனாங்குப்பம் அணுகு சாலையில், குடிமைப்பொருள் பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்கும் போலீசார், நேற்று காலை கண்காணித்தனர்.
அப்போது, அங்குள்ள கிடங்கில், டேங்கர் லாரியில் இருந்து டீசல் திருடியவர்களை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சோமசுந்தரம், 65, மாதவரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாசன், 46, திருவொற்றியூரைச் சேர்ந்த லாரி கிளீனர் ரமேஷ், 54, கொளத்துாரை சேர்ந்த கிடங்கு ஊழியர் சதீஷ், 34, என தெரிந்தது.
வடசென்னையில் இருந்து, காஞ்சிபுரத்திலுள்ள அரசு போக்குவரத்து நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட, 12,000 லிட்டர் டீசலில், 1,000 லிட்டரை அவர்கள் திருடியது தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், மூவரை தேடி வருகின்றனர். 3,000 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.