/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராயப்பேட்டை 'பங்க்'கில் ரவுசு சிறுவன் உட்பட நால்வர் கைது ராயப்பேட்டை 'பங்க்'கில் ரவுசு சிறுவன் உட்பட நால்வர் கைது
ராயப்பேட்டை 'பங்க்'கில் ரவுசு சிறுவன் உட்பட நால்வர் கைது
ராயப்பேட்டை 'பங்க்'கில் ரவுசு சிறுவன் உட்பட நால்வர் கைது
ராயப்பேட்டை 'பங்க்'கில் ரவுசு சிறுவன் உட்பட நால்வர் கைது
ADDED : ஜூலை 10, 2024 11:56 PM
சென்னை, ஜூலை 11-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர பாண்டியன், 35. இவர், ராயப்பேட்டை வெஸ்ட்காட் சாலையிலுள்ள இந்தியன் ஆயில் 'பெட்ரோல் பங்க்'கில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, இரண்டு 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வந்த நால்வர், பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பிக்க முயன்றனர்.
உடனே, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் அவர்களை மடக்கி, இரண்டு ஸ்கூட்டர்களின் சாவியையும் எடுத்துக் கொண்டனர்.
வேறு வழியின்றி பணத்தைக் கொடுத்த அவர்கள், சாவியை பெற்றுக்கொண்டு, ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு வந்த காசாளர் சுந்தர பாண்டியன் அவர்களிடம் பேசிய போது, நால்வரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ஜாம்பஜார் பாரதி சாலையைச் சேர்ந்த சதீஷ்குமார், 20, மணிகண்டன், 23, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட, நால்வரை கைது செய்தனர். சிறுவனை சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற மூவரை புழல் சிறையிலும் அடைத்தனர்.