/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைக்கு ஒதுங்கியவர்களிடம் பணம் பறிப்பு 2 போலீசாரிடம் அதிகாரிகள் விசாரணை மழைக்கு ஒதுங்கியவர்களிடம் பணம் பறிப்பு 2 போலீசாரிடம் அதிகாரிகள் விசாரணை
மழைக்கு ஒதுங்கியவர்களிடம் பணம் பறிப்பு 2 போலீசாரிடம் அதிகாரிகள் விசாரணை
மழைக்கு ஒதுங்கியவர்களிடம் பணம் பறிப்பு 2 போலீசாரிடம் அதிகாரிகள் விசாரணை
மழைக்கு ஒதுங்கியவர்களிடம் பணம் பறிப்பு 2 போலீசாரிடம் அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜூன் 09, 2024 12:56 AM
கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, மழைக்கு திருநங்கையரோடு சேர்ந்து ஒதுங்கி நின்ற இருவரை மிரட்டி, 700 ரூபாய் பணம் பறித்த நுங்கம்பாக்கம் ரோந்து போலீசார் இருவரிடம், உதவி கமிஷனர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அயப்பாக்கம், எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்தவர் பிரவீன் குமார், 24. போரூரில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள நண்பரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றார். நள்ளிரவு வீட்டிற்கு நண்பர் தமிழ் என்பவரை அழைத்துக் கொண்டு திரும்பினார்.
அப்போது மழை பெய்ததால், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். மற்றொரு பகுதியில் திருநங்கையர் ஒதுங்கி நின்றிருந்தனர்.
ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் இருவர், திருநங்கை யருடன் தொடர்பு கொண்டதாகக் கூறி மிரட்டி, 700 ரூபாய் பணம் பறித்து சென்றதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு பிரவீன் குமார் புகார் தெரிவித்தார்.
தன்னிடம் பணம் பறித்துச் சென்ற போலீஸ் ரோந்து வாகன புகைப்படம் உள்ளது என தெரிவித்தார். அது, நுங்கம்பாக்கம் காவல் நிலைய ரோந்து வாகனம் என்பது தெரியவந்தது. உடனே காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவரிடம் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை அடிப்படையில், இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நமது நிருபர் -