/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காலாவதி உப்பு பாக்கெட்டுகள் போரூர் ஏரிக்கரையில் குவிப்பு காலாவதி உப்பு பாக்கெட்டுகள் போரூர் ஏரிக்கரையில் குவிப்பு
காலாவதி உப்பு பாக்கெட்டுகள் போரூர் ஏரிக்கரையில் குவிப்பு
காலாவதி உப்பு பாக்கெட்டுகள் போரூர் ஏரிக்கரையில் குவிப்பு
காலாவதி உப்பு பாக்கெட்டுகள் போரூர் ஏரிக்கரையில் குவிப்பு
ADDED : ஜூன் 26, 2024 12:22 AM

போரூர், சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக, போரூர் ஏரி உள்ளது. சமூக விரோதிகளால் இந்த ஏரியில், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன.
இதனால், போரூர் ஏரி கழிவுநீர் குட்டையாக மாறும் அவல நிலை ஏற்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில், கடந்த 2021 ஜூலையில் செய்தி வெளியானது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏரியில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள், கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
தற்போது, ஏரியில் அதிக அளவில் ஆகாய தாமரை படர்ந்து உள்ளது. சமீபத்தில் இந்த ஆகாய தாமரை செடியில் சிக்கி, ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஏரியில் மாடுகளை குளிக்க வைப்பது, ஏரிக்கரையில் குப்பை கொட்டுவது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், போரூர் -- குன்றத்துார் சாலை போரூர் ஏரிக்கரையில் மர்ம நபர்கள், காலாவதியான உப்பு பாக்கெட்டுகளை கொட்டியுள்ளனர்.
இதை தடுக்க, போரூர் ஏரியை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். நடைபாதை அமைத்து, பகுதிமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.