/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம்
சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம்
சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம்
சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம்
ADDED : ஜூலை 19, 2024 12:12 AM

சென்னை,இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோரும், வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோரும் குடியேற்ற நடைமுறையை பின்பற்றி பதிவு செய்வது கட்டாயம். இதற்காக விமான நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனை எளிதாக்கும் வகையில், 'பாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன் - டிரஸ்டட் டிராவலர் புரோகிராம்' எனும், விரைவு குடியேற்ற சேவை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டில்லி விமான நிலையத்தில், கடந்த மாதம் இத்திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார்.
சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை, ஹைதராபாத், ஆமதாபாத், கொச்சி ஆகிய ஏழு முக்கிய விமான நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும், என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, விரைவு குடியேற்ற சேவை திட்டம், சென்னை விமான நிலையத்தில் அடுத்த மாதம் முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலையத்தில் குடியேற்ற சேவைகளை முடிக்க தனி கவுன்டர்கள் உள்ளன. ஆனால் 'பீக் ஹவர்' நேரங்களில், சோதனை செய்வதற்கு 40 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது.
விரைவு குடியேற்ற சேவையில், 80 சதவீதம் அளவுக்கு நேரம் மிச்சமாகும். இதற்காக, விமான நிலையத்தில் நான்கு புதிய கவுன்டர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் இறுதிக்குள் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.