Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு

இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு

இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு

இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு

ADDED : ஜூன் 27, 2024 12:31 AM


Google News
சென்னை, மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டம், இளைஞர் நீதி குழுமத்தில் பணிபுரிய, உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது.

'பிளஸ் - 2' தேர்ச்சி பெற்று, தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு சான்றிதழுடன், 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள், https://chennai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, சூளையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த தகவலை சென்னை கலகெடர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us