ADDED : ஜூன் 24, 2024 02:33 AM

திருமங்கலம்:சென்னையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து இளைஞர்கள் மத்தியில், போலீசார் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் திருமங்கலம் போலீசார் நேற்று, அண்ணா நகர் ஆறாவது அவென்யூவிலிருந்து, 50க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் இணைந்து, போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இளைஞர்கள் விழிப்புணர்வு பதகைகளை ஏந்தியவாறு, தெரு தெருவாக நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.