/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாலை பெயரை மாற்றாதீர்! ஆணைய தலைவர் கடிதம்சாலை பெயரை மாற்றாதீர்! ஆணைய தலைவர் கடிதம்
சாலை பெயரை மாற்றாதீர்! ஆணைய தலைவர் கடிதம்
சாலை பெயரை மாற்றாதீர்! ஆணைய தலைவர் கடிதம்
சாலை பெயரை மாற்றாதீர்! ஆணைய தலைவர் கடிதம்
ADDED : ஜூன் 21, 2024 12:32 AM
சென்னை, 'ஆலந்துார் பகுதியில் எம்.சி.ராஜா சாலை பெயர் மாற்றத்தை தடுக்க வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பட்டியல் சமூக மக்களின் மாபெரும் தலைவரான மயிலை சின்னத்தம்பி ராஜா என்ற எம்.சி.ராஜா. இவர், பரங்கிபேட்டை என்ற தற்போது ஆலந்துார் 161வது வார்டில் வாழ்ந்தார். அவரது மறைவுக்கு பின், அவர் வாழ்ந்த சாலையின் பெயர் எம்.சி.ராஜா என, அழைக்கப்பட்டு வந்தது. தற்போது, தெற்கு ராஜா தெரு, வடக்கு ராஜா தெரு என மாறியிருக்கிறது. ராஜா என்பது பொதுவான பெயராகவே கருதப்படும்.
ஒரு தலைவரின் பெயர் சாதாரணமாக வைக்கப்படுவதில்லை. அவர் செய்த சாதனைகளின் அடிப்படையிலேயே வைக்கப்படுகிறது. அவ்வாறு இருக்க, பட்டியலின தலைவரின் பெயரை மாற்றுவது, அச்சமூக மக்களின் தலைவர்களை இருட்டடிப்பு செய்வதற்கு சமம். எனவே, ஏற்கனவே இருந்த எம்.சி.ராஜா சாலை என, அப்பெயரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.