/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்' மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'
மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'
மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'
மேலிட உத்தரவால் தி.மு.க., கவுன்சிலர்கள் 'அப்செட்'
ADDED : ஜூன் 28, 2024 12:15 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் 48 வார்டுகள் உள்ளன. இதில், 35 வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க.,வைச் சேர்ந்தோர்.
நேற்று காலை 10:30 மணிக்கு, மேயர் உதயகுமார் தலைமையில், மாநகராட்சியின் இரண்டாவது கூட்டம் துவங்கியது. இதில், மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஜான், மா.கம்யூ., 10வது வார்டு: தெருக்களில், 20 வாட் திறன் உடைய எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்படுகின்றன. மின்கம்பங்கள் இடையே இடைவெளி அதிகமாக உள்ளதால், வெளிச்சம் போதவில்லை. எனவே, 40 அல்லது 60 வாட் எல்.இ.டி., விளக்குகள் அமைக்க வேண்டும்.
கார்த்திக் ரமேஷ், ம.தி.மு.க., 48வது வார்டு: ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள 1.40 ஏக்கர் ஓ.எஸ்.ஆர்., நிலத்தில், பூங்கா அமைக்கப்பட உள்ளது. வெறும் பூங்காவாக இல்லாமல் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.
ஆறுமுகம், அ.தி.மு.க., 25வது வார்டு: குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்கு, ஏற்கனவே பலர் 'டிபாசிட்' தொகை கட்டியுள்ளனர்.
ஆனால், மீண்டும் டிபாசிட் தொகை கட்ட மாநகராட்சியில் 'டிமாண்ட் நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தன.