/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பட்டாளத்தில் வீடு புகுந்து பெண்ணுக்கு தீ வைப்பு பட்டாளத்தில் வீடு புகுந்து பெண்ணுக்கு தீ வைப்பு
பட்டாளத்தில் வீடு புகுந்து பெண்ணுக்கு தீ வைப்பு
பட்டாளத்தில் வீடு புகுந்து பெண்ணுக்கு தீ வைப்பு
பட்டாளத்தில் வீடு புகுந்து பெண்ணுக்கு தீ வைப்பு
ADDED : ஜூன் 28, 2024 12:15 AM
ஓட்டேரி, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி, 45. ஆறுமுகம் என்பவருடன் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகளை பெற்ற செல்வி, 20 ஆண்டுகளுக்கு முன், கணவரை விட்டு பிரிந்தார்.
புரசைவாக்கம் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த செல்வி, 20 ஆண்டுகளாக புளியந்தோப்பை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சுப்பிரமணி, 60, என்பவருடன் வாழ்ந்துள்ளார்.
சில நாட்களாக சுப்பிரமணியிடம் பேசுவதை செல்வி தவிர்த்துள்ளார். நேற்று மாலை, பட்டாளம், ராமானுஜ தோட்டம் பகுதியிலுள்ள மகள் நாகவல்லி வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்த சுப்பிரமணி, பெட்ரோல் கேனுடன் அங்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு வரும்படி செல்வியிடம் பேசியும் சமாதானம் ஆகாததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதில் இருவர் மீதும் தீப்பற்றியது. அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த நாகவல்லியின் கணவர் தினேஷ், தீயை அணைக்க முயன்றார். அவர் மீதும் தீப்பற்றியது.
அங்கிருந்தோர் மூவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்வி 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.