பாஞ்சாலி கோவிலில் தீமிதி திருவிழா
பாஞ்சாலி கோவிலில் தீமிதி திருவிழா
பாஞ்சாலி கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : ஜூன் 09, 2024 12:51 AM
அரும்பாக்கம்:பிரசித்தி பெற்ற, அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவிலில், இன்று மாலை தீமிதி திருவிழா நடக்கிறது. அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, பிரசித்தி பெற்ற பாஞ்சாலி அம்மன் கோவிலின் 41ம் ஆண்டு தீமிதி திருவிழா துவங்கி உள்ளது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, அதே பகுதியில் உள்ள உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள் 1,008 பால்குடம் ஏந்தி, தீச்சட்டியுடன், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.
பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானமும், காப்பு கட்டுதலும் நடந்தது. நேற்று மதியம் அன்னதானமும், மாலை இசை கச்சேரியும் நடந்தது.
தொடர்ந்து இன்று காலை, அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின், அன்னதானமும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து இன்று மாலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பும், சாத்துப்படி புஷ்ப அலங்காரத்துடன் தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.