/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பா.ம.க., பிரமுகர் மனைவி கஞ்சா வழக்கில் கைது பா.ம.க., பிரமுகர் மனைவி கஞ்சா வழக்கில் கைது
பா.ம.க., பிரமுகர் மனைவி கஞ்சா வழக்கில் கைது
பா.ம.க., பிரமுகர் மனைவி கஞ்சா வழக்கில் கைது
பா.ம.க., பிரமுகர் மனைவி கஞ்சா வழக்கில் கைது
ADDED : ஜூன் 09, 2024 12:51 AM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, ராஜா தோட்டம் பகுதியில் கஞ்சா விற்ற விஜயசாந்தி, சஞ்சய் மற்றும் செல்வராசன் ஆகிய மூவரை, பேசின்பாலம் போலீசார் கைது செய்து, கடந்த 6ம் தேதி சிறையில் அடைத்தனர்.
செல்வராசனிடம் நடத்திய விசாரணையில், மத்திய சென்னை மாவட்ட பா.ம.க., செயலர் சரவணனின் மனைவி பானுமதி என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி விற்றதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, பெரியபாளையத்தில் பதுங்கியிருந்த பானுமதி மற்றும் இதில் தொடர்புள்ள ஆனந்தவல்லி, ராகேஷ், வீரராகவன், முகமது நாசர், மோனிஷா ஆகிய ஆறு பேரை, பேசின்பாலம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.