குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
ADDED : ஜூலை 07, 2024 12:40 AM
காரம்பாக்கம், வளசரவாக்கம், காரம்பாக்கம் 150வது வார்டு மண்டலம், அப்பாதுரை பிள்ளை தெருவில் குளம் உள்ளது. 2020ல், 22.14 லட்சம் ரூபாய் செலவில், குளம் துார்வாரி சீரமைக்கப்பட்டது.
அவ்வப்போது பெய்த மழையால், குளம் நிரம்பியுள்ளது. இதில், பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதால், குளத்து நீர் மாசடைந்து உள்ளது. இந்நிலையில், குளத்தில் உள்ள மீன்கள், செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, குளத்தில் படர்ந்துள்ள பாசி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.