/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தி.நகரில் ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம் தி.நகரில் ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம்
தி.நகரில் ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம்
தி.நகரில் ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம்
தி.நகரில் ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம்
ADDED : ஜூன் 11, 2024 12:22 AM
சென்னை, பக்த பாத சேவா டிரஸ்ட் சார்பில் சென்னையில் முதல் முறையாக ஸ்ரீ பத்ராச ராமர் தரிசன மூன்று நாள் நிகழ்வு, வரும் 28ம் தேதி முதல் மூன்று நாள், சென்னை, தி.நகர், சவுத் போக் ரோட்டில் உள்ள கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்வில் ஸ்ரீ பத்ராசல ராமர், 20 அடி உயர அனுமார் தரிசனம் தர உள்ளனர்.
மேலும், 1,008 புடவையால் சீதாதேவிக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. குத்துவிளக்கு பூஜை, புத்ரகாமேஷ்டி யாகம், சீதா கல்யாணம், ராம பட்டாபிஷேகம் நடக்க உள்ளது.
நிகழ்ச்சியின் போது சுப்ரபாதம், உபன்யாசம், பரதநாட்டியம், சீதா கல்யாணம், ராம கீர்த்தனம், விளக்கு பூஜை, புடவை அர்ச்சனை, பஜன் ஆகியவை நடத்தப்படுகின்றன.
இதில், 28ம் தேதி நடக்கும் குத்துவிளக்கு பூஜை, புத்ரகாமேஷ்டி யாகம், 29ம் தேதி நடக்கும் புடவை அர்ச்சனையில், பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.