/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமி தற்கொலை வழக்கு கல்லுாரி மாணவன் கைது சிறுமி தற்கொலை வழக்கு கல்லுாரி மாணவன் கைது
சிறுமி தற்கொலை வழக்கு கல்லுாரி மாணவன் கைது
சிறுமி தற்கொலை வழக்கு கல்லுாரி மாணவன் கைது
சிறுமி தற்கொலை வழக்கு கல்லுாரி மாணவன் கைது
ADDED : ஆக 05, 2024 01:06 AM

விருகம்பாக்கம், சாலிகிராமத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவியான 17 வயது சிறுமி, கடந்த 25ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருகம்பாக்கம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 'இன்ஸ்டாகிராம்' எனும் வலைதள பக்கம் வாயிலாக சிறுமிக்கு பழக்கமான நபர் ஒருவர், சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்போவதாக மிரட்டல்விடுத்துள்ளார்.
பயந்து போய் சிறுமி தற்கொலை செய்தது' தெரியவந்தது.
சிறுமியை தற்கொலைக்கு துாண்டிய, ராமநாதபுரம் மாவட்டம், சூரன்கோட்டையைச் சேர்ந்த காந்திஜி, 19, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், காரைக்குடி தனியார் கல்லுாரி மூன்றாம் ஆண்டு பி.காம் மாணவர்.