/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வங்கி ஷட்டர் உடைக்க முயன்ற நபர் சிக்கினார் வங்கி ஷட்டர் உடைக்க முயன்ற நபர் சிக்கினார்
வங்கி ஷட்டர் உடைக்க முயன்ற நபர் சிக்கினார்
வங்கி ஷட்டர் உடைக்க முயன்ற நபர் சிக்கினார்
வங்கி ஷட்டர் உடைக்க முயன்ற நபர் சிக்கினார்
ADDED : ஆக 05, 2024 01:05 AM

வடபழனி, வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தின் எதிரில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. கடந்த 2ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைக்க முயன்றார். இதைக்கண்ட பகுதிவாசிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வடபழனி போலீசார் வந்து அந்த நபரை மடக்கி பிடித்து, கைது செய்தனர். போலீசாரிடம் அந்த நபர் 'அறையில் ஒருவர் சிக்கி இருக்கிறார்; அவரை, கதவை உடைத்து காப்பாற்ற முயன்றேன்' எனக் கூறியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் நடைபாதையில் தங்கி, வேலைகள் செய்து வந்த செந்தில் குமார், 45, என்பதும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் தெடர்ந்து விசாரிக்கின்றனர்.