/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஜாமினில் விடுதலையான சென்னை ரவுடி கோவை சிறை வாசலிலேயே கைது ஜாமினில் விடுதலையான சென்னை ரவுடி கோவை சிறை வாசலிலேயே கைது
ஜாமினில் விடுதலையான சென்னை ரவுடி கோவை சிறை வாசலிலேயே கைது
ஜாமினில் விடுதலையான சென்னை ரவுடி கோவை சிறை வாசலிலேயே கைது
ஜாமினில் விடுதலையான சென்னை ரவுடி கோவை சிறை வாசலிலேயே கைது
ADDED : ஜூலை 09, 2024 12:14 AM
ஆதம்பாக்கம், சென்னை, ஆதம்பாக்கம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் ரவுடி ராபின், 30. இவர், 2016ல் ஏழுமலை என்பவர் கொலை வழக்கு, 2021ல் நாகூர் மீரான் என்பவர் கொலை வழக்கு உள்ளிட்ட கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு வழக்குகள் என ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல், மவுன்ட், சேலையூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட காவல் நிலையங்களில், 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த மார்ச் மாதம் வழிப்பறி வழக்கில் ஆதம்பாக்கம் போலீசாரல் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ராபினை ஜாமினில் வெளியே எடுக்க, அவரது கூட்டாளிகள் முயற்சித்தனர். இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் ஆதம்பாக்கம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் ஜாமின் பெற்று, கோவை சிறையில் இருந்து ராபின் வெளியே வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து, கோவை விரைந்த போலீசார், ராபினை சிறைச்சாலை வாசலில் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.