/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாக்ஸ் மாலை நேர பாலிகிளினிக் பயன்படுத்த அழைப்பு பாக்ஸ் மாலை நேர பாலிகிளினிக் பயன்படுத்த அழைப்பு
பாக்ஸ் மாலை நேர பாலிகிளினிக் பயன்படுத்த அழைப்பு
பாக்ஸ் மாலை நேர பாலிகிளினிக் பயன்படுத்த அழைப்பு
பாக்ஸ் மாலை நேர பாலிகிளினிக் பயன்படுத்த அழைப்பு
ADDED : ஜூலை 03, 2024 12:18 AM
மாலை நேர பாலிகிளினிக் பயன்படுத்த அழைப்பு
சென்னை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்கள் வசதிக்காக, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, பாலிகிளினிக் செயல்பட்டு வருகிறது.
இதில், பல்துறை சிறப்பு டாக்டர்கள் வாயிலாக, பல் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் சிகிச்சை, மகளிர் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம் போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் செயல்படும் மாலைநேர பாலிகிளினிக்கில் வழங்கப்படும் சிறப்பு மருத்துவ ஆலோசனையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, மாநகர சுகாதார நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது:
சென்னை மக்களுக்காக, 2018 முதல், பாலிகிளினிக் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிளினிக்கிலும், ஒவ்வொரு நாளும், சிறப்பு மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எந்தெந்த நாட்களில், என்னென்ன சிகிச்சை அளிப்பது குறித்து, மாநகராட்சியின் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு வருகிறோம். அவற்றை பார்த்து, இடங்களையும், சிகிச்சை விபரங்களையும் மக்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்த கிளினிக்கை பயன்படுத்தி, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.