ADDED : ஜூன் 05, 2024 12:27 AM
சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், எம்.ஜி.ஆர்., நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33. நேற்று முன்தினம் இரவு மனைவி, குழந்தையுடன் வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சமையலறையில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, மின் கசிவால் 'பிரிஜ்' வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனே குழந்தையுடன் வெளியேறினார். பின், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.