/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவள்ளூரில் பிரதான கட்சிகளின்றி வெறிச்சோடிய ஓட்டு எண்ணும் மையம் திருவள்ளூரில் பிரதான கட்சிகளின்றி வெறிச்சோடிய ஓட்டு எண்ணும் மையம்
திருவள்ளூரில் பிரதான கட்சிகளின்றி வெறிச்சோடிய ஓட்டு எண்ணும் மையம்
திருவள்ளூரில் பிரதான கட்சிகளின்றி வெறிச்சோடிய ஓட்டு எண்ணும் மையம்
திருவள்ளூரில் பிரதான கட்சிகளின்றி வெறிச்சோடிய ஓட்டு எண்ணும் மையம்
ADDED : ஜூன் 05, 2024 12:28 AM

திருவள்ளூர், திருவள்ளூர் லோக்சபா தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை, திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் நடந்தது. பாதுகாப்பிற்காக, 800க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
ஓட்டு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க தனி அறை இருந்தது. ஆனால் இருக்கை, குடிநீர், கழிப்பறை மற்றும் உணவு, 'வைபை' உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தராததால், பத்திரிகையாளர்கள் சிரமப்பட்டனர்.
பலமுறை கேட்டும், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மதியத்திற்கு மேல் இருக்கைகள், குடிநீர், உணவு வசதி செய்யப்பட்டது.
ஒவ்வொரு சுற்றுக்கும் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள், முன்னிலை குறித்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 'மைக்' வாயிலாக தகவல் தருவது வழக்கம் ஆனால், அது கூட செய்யாததால், வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விபரம் குறித்து தெரிந்து கொள்ள முடியவில்லை.
மதியத்திற்கு மேல், பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரவில்லை. இதனால், ஓட்டு எண்ணும் மையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல், நேற்று தபால் ஓட்டு எண்ணிக்கை, காலை 8:20 மணிக்கு துவங்கி, மாலை 4:00 மணி வரை நடந்தது. அப்போது, இரண்டு மூன்று முகவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.
அரக்கோணம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிட்டார்.
தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, நேற்று காலை 6:30 மணிக்கு தன் ஆதரவாளர்களுடன், திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.