/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடிநீர் குழாயில் உடைப்பு வளசரவாக்கத்தில் நெரிசல் குடிநீர் குழாயில் உடைப்பு வளசரவாக்கத்தில் நெரிசல்
குடிநீர் குழாயில் உடைப்பு வளசரவாக்கத்தில் நெரிசல்
குடிநீர் குழாயில் உடைப்பு வளசரவாக்கத்தில் நெரிசல்
குடிநீர் குழாயில் உடைப்பு வளசரவாக்கத்தில் நெரிசல்
ADDED : ஜூன் 12, 2024 12:38 AM

வளசரவாக்கம், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர் செய்யும் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் போரூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, ஆற்காடு சாலை உள்ளது. இச்சாலையில் தற்போது, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், நெரிசல் நிலவி வருகிறது.
இச்சாலை பகுதியில், வீராணம் ஏரி குடிநீர் குழாய் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து செல்லும் குடிநீர் குழாய் ஆகியவை செல்கின்றன.
கடந்த ஆண்டு செப்., மாதம் ஆற்காடு சாலை, ஆலப்பாக்கம் பிரதான சாலை அருகே, வீராணம் ஏரி குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் குளம் போல் குடிநீர் தேங்கி வீணானது.
இதனால், கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
தற்போது, செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 530 எம்.எல்.டி., குடிநீர் சென்னை நகரின் பிறபகுதிகளுக்கு எடுத்து செல்லும் குடிநீர் குழாயிலும், வளசரவாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சில நாட்களாக ஆற்காடு சாலை, ஆலப்பாக்கம் பிரதான சாலை அருகே குடிநீர் கசிந்து வந்தது.
தற்போது குளம் போல் தண்ணீர் தேங்கி, கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல் ஆற்காடு சாலையில் குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சீர் செய்யும் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்காடு சாலை, வாகன போக்குவரத்து மிகுந்த பிரதான சாலை என்பதால், போக்குவரத்தை கட்டுப்படுத்தி பணிகள் மேற்கொள்வதில் சிரமம் நிலவி வருகிறது.