/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பார்வையற்றோர் வாலிபால் நாளை துவக்கம் பார்வையற்றோர் வாலிபால் நாளை துவக்கம்
பார்வையற்றோர் வாலிபால் நாளை துவக்கம்
பார்வையற்றோர் வாலிபால் நாளை துவக்கம்
பார்வையற்றோர் வாலிபால் நாளை துவக்கம்
ADDED : ஜூலை 25, 2024 12:24 AM
சென்னை,
தமிழ்நாடு பார்வையற்றோருக்கான வாலிபால் சங்கம் மற்றும் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி இணைந்து, 9வது ஆண்டு பார்வையற்றோருக்கான மாநில வாலிபால் போட்டியை, நாளை துவங்குகின்றன.
போட்டிகள், செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், நாளை மறுநாள் வரை நடக்கிறது.
மாநில முழுதும் இருந்து, 21 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. ஆண்களில் 16 அணிகளும், பெண்களில் ஐந்து அணிகளும், லீக் முறையில் மோதுகின்றன.
காலை 10:00 மணிக்கு துவங்கும் முதல் நாள் போட்டியை, சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் - கல்லுாரி நிறுவனர் பாபு மனோகரன் உள்ளிட்டோர் துவங்கி வைக்கின்றனர்.