/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 13 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., இரண்டாமிடம்; அ.தி.மு.க., அதிர்ச்சி 13 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., இரண்டாமிடம்; அ.தி.மு.க., அதிர்ச்சி
13 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., இரண்டாமிடம்; அ.தி.மு.க., அதிர்ச்சி
13 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., இரண்டாமிடம்; அ.தி.மு.க., அதிர்ச்சி
13 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., இரண்டாமிடம்; அ.தி.மு.க., அதிர்ச்சி
ADDED : ஜூன் 06, 2024 12:23 AM
சென்னை, சென்னையில், முதல்வரின் தொகுதி உட்பட, 13 சட்டசபை தொகுதிகளில், பா.ஜ., இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சென்னையில், தி.மு.க., - அ.தி.மு.க., தவிர வேறு கட்சிகளுக்கு வாய்ப்பை இல்லை என்ற நிலை இருந்தது. அதை, இந்த தேர்தல் மாற்றி அமைத்துள்ளது.
தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வை முந்தி, பா.ஜ., இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
அதிலும், தியாகராயநகர் சட்டசபை தொகுதியில், முதலிடம் பெற்ற தி.மு.க.,வைவிட, 5,884 ஓட்டுகள் மட்டுமே, பா.ஜ., குறைவாக பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வைவிட 27,241 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது.
மத்திய சென்னை லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், தே.மு.தி.க., போட்டியிட்டது. இந்த தொகுதிக்கு உட்பட்ட, வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய ஆறு தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
வட சென்னை லோக்சபா தொகுதியில், முதல்வரின் தொகுதியான கொளத்துாரில், பா.ஜ., இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க.,நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தில், 13 தொகுதிகளில், இரண்டாம் இடத்தை பிடித்தது பா.ஜ., தொண்டர்களிடம் மகிழ்ச்சியையும், அ.தி.மு.க., தொண்டர்களிடம் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.