/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு
ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு
ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு
ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு
ADDED : ஆக 02, 2024 12:43 AM

கண்ணகிநகர்,கண்ணகிநகரை சேர்ந்தவர் லாரன்ஸ், 24. ஐ.டி., ஊழியர். சில மாதங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சரவணன், 30, என்பவர், போதையில் லாரன்சுடன் தகராறு செய்தார். பகுதிமக்கள் சமரசம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சரவணன் உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து, லாரன்ஸை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், அவரின் கை எலும்பு துண்டானது. பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கண்ணகிநகர் போலீசார், நேற்று தாக்குதல் நடத்திய சரவணன் அவரின் தம்பி அந்தோணி ராஜ், 23, சூர்யா, 23, சிவகுமார், 27, சந்தோஷ், 20, ஆகியோரை கண்ணகிநகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்களில் சரவணன், அந்தோணி ராஜ் ஆகியோர் போலீசாரிடம் தப்பி செல்ல முயன்று வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
இதில், சரவணனின் காலிலும், அந்தோணி ராஜின் கையிலும் முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சரவணன் மீது, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள், அந்தோணி ராஜ் மீது ஐந்து வழக்குகள், சூர்யா மீது 10 வழக்குகள், சிவகுமார் மீது, 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்கில் தப்பி ஓடிய சூர்யா, 24, என்ற மற்றொரு நபரை போலீசார் தேடுகின்றனர்.