/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டிசம் பாதித்த மாணவர் டிரம்ஸ் வாசித்து சாதனை ஆட்டிசம் பாதித்த மாணவர் டிரம்ஸ் வாசித்து சாதனை
ஆட்டிசம் பாதித்த மாணவர் டிரம்ஸ் வாசித்து சாதனை
ஆட்டிசம் பாதித்த மாணவர் டிரம்ஸ் வாசித்து சாதனை
ஆட்டிசம் பாதித்த மாணவர் டிரம்ஸ் வாசித்து சாதனை
ADDED : ஜூன் 06, 2024 12:33 AM

சென்னை, சென்னை, பட்டாபிராம் அருகில் உள்ள முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்தவர் விஷால், 20. சிறுவயதில் இருந்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் பெற்றோர், பட்டாபிராமில் உள்ள ஹோப் அறக்கட்டளையின் சார்பில் செயல்படும் சிறப்பு பள்ளியில் சேர்த்தனர்.
இவர், பாடல்களுக்கு தாளம் போடுவதைக் கண்ட சிறப்பாசிரியர்கள், இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அவர் தாளமிடுவதை ஒன்றி கவனித்ததை கண்டறிந்தனர். பின், அவருக்கு டிரம்ஸ், கீபோர்ட் வாசிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அறிவுசார் குறைபாட்டு தினத்தில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் டிரம்ஸ் வாசித்தார். நேற்று முன்தினம், ஷெனாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில், ஆறு மணி நேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்தார்.
இதை, 'வேல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் பாராட்டியதுடன், ஆட்டிசம் பாதித்தவர் ஆறு மணி நேரம் வாசித்தது, உலக சாதனையாக அங்கீகரித்தது.
அந்நிறுவனத்தின் சான்றிதழை, இசையமைப்பாளர் சத்யா மற்றும் கர்நாடக இசை பாடகர் ஓ.எஸ்.அருண், ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் நிறுவனர், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினருமான நாகராணி ஆகியோர் வழங்கி, வாழ்த்தினர்.