/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு...! கழிவுநீரில் மிதக்கும் அங்கன்வாடி மையம் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு...! கழிவுநீரில் மிதக்கும் அங்கன்வாடி மையம்
மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு...! கழிவுநீரில் மிதக்கும் அங்கன்வாடி மையம்
மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு...! கழிவுநீரில் மிதக்கும் அங்கன்வாடி மையம்
மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு...! கழிவுநீரில் மிதக்கும் அங்கன்வாடி மையம்
ADDED : ஜூலை 18, 2024 12:12 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சி, அண்ணனுார் 31வது வார்டில், அன்னை சத்யா நகர் பிரதான சாலை உள்ளது. இங்கு, அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த மையம், சாலையின் முட்டுச்சந்து பகுதியில் அமைந்துள்ளது.
இதன் அருகே உள்ள திருமுல்லைவாயில் சி.டி.எச்., சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அன்னை சத்யா நகரில் பாய்கிறது.
ஆனால், கழிவுநீர் ஓடை பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர், அங்கன்வாடி மைய வாசலில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை பராமரித்து வந்த அங்கன்வாடி மையத்தில், இன்று 20க்கும் குறைவான குழந்தைகளே உள்ளனர். குழந்தைகளுக்கு நோய்த் தொற்றும் அபாயத்தால், பெற்றோர் குழந்தைகளை விடத்தயங்குகின்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
குழந்தைகளின் நலனை கருத்தில் வைத்து, முதல்வர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.