/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'டாஸ்மாக்' பாரில் தகராறு மூவருக்கு போலீஸ் 'காப்பு' 'டாஸ்மாக்' பாரில் தகராறு மூவருக்கு போலீஸ் 'காப்பு'
'டாஸ்மாக்' பாரில் தகராறு மூவருக்கு போலீஸ் 'காப்பு'
'டாஸ்மாக்' பாரில் தகராறு மூவருக்கு போலீஸ் 'காப்பு'
'டாஸ்மாக்' பாரில் தகராறு மூவருக்கு போலீஸ் 'காப்பு'
ADDED : ஜூன் 04, 2024 12:40 AM
அமைந்தகரை, டாஸ்மாக் மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில், மதுக்கூட ஊழியர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அரும்பாக்கம், பீட்டர் ராஜா தெருவைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ், 24. இவரது தம்பி பிரதீப்ராஜ் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, நேற்று முன்தினம் ஈ.வெ.ரா., சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் மது அருந்த சென்றனர்.
அப்போது, மதுக்கூடத்தில் பணிபுரியும் ராஜேந்திரன் மற்றும் பாலசுந்தர் ஆகியோரிடம் மூவரும், 'ஜிபே' வாயிலாக பணம் தருவதாக கூறி, மது வாங்கி வரும்படி கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் மறுத்ததால், இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ஆனஸ்ட்ராஜ் மற்றும் பிரதீப்ராஜ் இருவரும், மதுக்கூட ஊழியர்களை கையால் அடித்துள்ளனர். உடனே அவர்களும், அங்கிருந்த மதுபாட்டில்களால் ஆனஸ்ட்ராஜ் மற்றும் பரதீப்ராஜை தாக்கினர்.
இதில், இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. சம்பவம் அறிந்து வந்த அமைந்தகரை போலீசார், மதுக்கூட ஊழியர்களான சிவகங்கையைச் சேர்ந்த ராஜேந்திரன், 34, பாலசுந்தரம், 34, மற்றும் மாங்காடு பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ், 26, ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.