Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வித்யாசாகரில் பி.எட்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

வித்யாசாகரில் பி.எட்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

வித்யாசாகரில் பி.எட்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

வித்யாசாகரில் பி.எட்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூலை 10, 2024 11:57 PM


Google News
சென்னை, கோட்டூர்புரத்தில், 'வித்யாசாகர்' எனும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு, கடந்த 38 ஆண்டுகளாக கல்வி மையத்துடன் இயங்கி வருகிறது.

இங்கு, 2024 - 26ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான, முழு நேர 'பி.எட்.,' சிறப்பு கல்வி படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படிப்பை முடித்த பின், சிறப்பு பள்ளிகளில் பணிபுரியலாம். சொந்தமாக மறுவாழ்வு மையமும் துவங்கலாம். அரசு பணிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்விலும் பங்கேற்கலாம்.

இப்படிப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலையில் இணைக்கப்பட்டதால், ஜெனரல் பி.எட்., படிப்பிற்கு இணையாக, இந்திய மறுவாழ்வு கவுன்சிலிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, hrd@vidasagar.co.in அல்லது 98400 35203 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us