/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நிதி ஒதுக்கீடு கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நிதி ஒதுக்கீடு
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நிதி ஒதுக்கீடு
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நிதி ஒதுக்கீடு
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 20, 2024 12:33 AM
சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதியில் உள்ள, 109, 110, 111, 112, 113, 118 ஆகிய ஆறு வார்டுகளில், கழிவுநீர் அடைப்பு பிரச்னை, பெரும் தலைவலியாக உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, அப்பகுதியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மிகவும் பழமையானது என்பதும் சிறிய அளவிலான குழாய் இருப்பதால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆறு வார்டுகளுக்கு உட்பட்ட, 136 தெருக்களில் கழிவுநீர் குழாயை மாற்றவும், புதிதாக நான்கு கழிவுநீர் அகற்று நிலையம் அமைக்கவும், 53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியை, குடிநீர் வாரியத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.