/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாலிபரின் உறுப்பு தானம்: ஐவருக்கு மறுவாழ்வு வாலிபரின் உறுப்பு தானம்: ஐவருக்கு மறுவாழ்வு
வாலிபரின் உறுப்பு தானம்: ஐவருக்கு மறுவாழ்வு
வாலிபரின் உறுப்பு தானம்: ஐவருக்கு மறுவாழ்வு
வாலிபரின் உறுப்பு தானம்: ஐவருக்கு மறுவாழ்வு
ADDED : ஜூலை 28, 2024 12:40 AM
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்தவர் உதயகுமார், 28. கடந்த, 24ம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானமளிக்க, உதயகுமார் குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, இரண்டு சிறுநீரகம், இதயம், கல்லீரல், எலும்பு ஆகிய ஐந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
அதில், ஒரு சிறுநீரகம் மற்றும் எலும்பு ஆகியவை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைநோயாளிகளுக்கும், மற்ற உறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கும் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த வாலிபரின் உறுப்பு தானத்தால், ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.