/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளச்சேரி, தாம்பரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் வேளச்சேரி, தாம்பரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
வேளச்சேரி, தாம்பரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
வேளச்சேரி, தாம்பரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
வேளச்சேரி, தாம்பரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 12:33 AM

வேளச்சேரி, அ.தி.மு.க.,வின் தென்சென்னை மாவட்டம் சார்பில் வேளச்சேரி, காந்தி சாலையில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலருமான அசோக் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மின் கட்டணம் உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காதது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடர்பாக கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன், தென்சென்னை மாவட்ட அம்மா பேரவை செயலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாம்பரம்
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியது மற்றும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில், மாவட்ட செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில், தி.மு.க., அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
பள்ளிக்கரணை
மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணையில், சென்னை புறநகர் அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கே.பி.கந்தன் தலைமையில்,1,000க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், ஆளும் தி.மு.க., அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர்.