/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ரூ.2.71 கோடியில் பணி துவக்கம் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ரூ.2.71 கோடியில் பணி துவக்கம்
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ரூ.2.71 கோடியில் பணி துவக்கம்
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ரூ.2.71 கோடியில் பணி துவக்கம்
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் ரூ.2.71 கோடியில் பணி துவக்கம்
ADDED : ஜூலை 29, 2024 02:16 AM

செம்மஞ்சேரி:சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி மாநகராட்சி நடுநிலை பள்ளியில், 800க்கும் மேற்பட்டோர் படிக்கின்றன. மாணவ - மாணவியர் சேர்க்கை அதிகரித்ததால், வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், கூடுதல் வகுப்பறை கட்ட 2.71 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியது. இதில், 7,500 சதுர அடி பரப்பில் இரண்டடுக்கு கட்டடத்தில், 10 வகுப்பறைகள், ஒருகழிப்பறை கட்டப்படுகிறது.
ஒவ்வொரு வகுப்பறையும் 12 அடி உயரம், 200 சதுர அடி பரப்பில் அமைகிறது. வராண்டா 6 அடி அகலத்தில் கட்டப்படுகிறது. தரை பலப்படுத்தும் பணி நடக்கிறது.
ஓராண்டுக்குள் வகுப்பறைகளை கட்டி முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் வாயிலாக இடப்பற்றாக்குறை இல்லாமல் பள்ளி செயல்படும் என, அதிகாரிகள்கூறினர்.