ADDED : ஜூலை 19, 2024 12:38 AM
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில், நுாறாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில் மீனாட்சி அம்மன் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
ஆடி மாதத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று காலை, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மஞ்சக் காப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.
மாலை, அம்மனுக்கு புடவை சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு மஞ்சள் காப்பு பிரசாதம், சுமங்கலி 'செட்' பிரசாதமாக வினியோகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையும், இந்நிகழ்வு நடக்கிறது. வரும் ஆக., 7ம் தேதி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து, அன்று மாலை வேளையில், பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வளையல் வழங்கப்படும்.