/உள்ளூர் செய்திகள்/சென்னை/கல்குவாரி பள்ளத்தில் குதித்த வாலிபர் பலிகல்குவாரி பள்ளத்தில் குதித்த வாலிபர் பலி
கல்குவாரி பள்ளத்தில் குதித்த வாலிபர் பலி
கல்குவாரி பள்ளத்தில் குதித்த வாலிபர் பலி
கல்குவாரி பள்ளத்தில் குதித்த வாலிபர் பலி
ADDED : ஜூலை 19, 2024 12:38 AM
பல்லாவரம், பல்லாவரம் அடுத்த மூவசரம்பேட்டை சாலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 32; கார் ஓட்டுனர். வீட்டில் இருந்து வெளியே சென்ற இவரை, குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு தேடினர்.
அப்பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தின் கரையில் நின்று மது அருந்தியதாகவும், போதையில் பள்ளத்தில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளத்தின் கரையில் அவரது சட்டை இருந்துள்ளது.
இது குறித்து குடும்பத்தார், பல்லாவரம் போலீசில் புகார் அளித்தனர்.
நேற்று காலை, பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், சதீஷ்குமாரின் உடலை மீட்டனர். மேற்கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.