/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புளியந்தோப்பில் வழிப்பறி திருடர்கள் 9 பேர் சிக்கினர் புளியந்தோப்பில் வழிப்பறி திருடர்கள் 9 பேர் சிக்கினர்
புளியந்தோப்பில் வழிப்பறி திருடர்கள் 9 பேர் சிக்கினர்
புளியந்தோப்பில் வழிப்பறி திருடர்கள் 9 பேர் சிக்கினர்
புளியந்தோப்பில் வழிப்பறி திருடர்கள் 9 பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 13, 2024 12:29 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சூர்யா, 23; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, மாநகராட்சி ஆட்டிறைச்சி கூடம் அருகே, அவரை வழி மறித்த ஐந்து பேர் கும்பல், கத்திமுனையில் அவரிடம் இருந்த, 800 ரூபாயை பறித்து சென்றனர்.
புளியந்தோப்பு போலீசார் விசாரித்து, வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 19, புளியந்தோப்பு லட்சுமணன், 32, சுரேஷ், 42, மற்றும் குபேந்திரன், 34, சூளை கணேஷ், 40, ஆகியோரை, நேற்று கைது செய்து, இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர்.
புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் விஜய், 47; தனியார் நிறுவன ஊழியர். இவரை, நேற்று முன்தினம் இரவு, புளியந்தோப்பு, பவுடர் மில்ஸ் சாலையில் வழிமறித்த நான்கு பேர் கும்பல், அவரை மிரட்டி 600 ரூபாய் பறித்து சென்றனர்.
இது குறித்து விசாரித்த, பேசின்பாலம் போலீசார், அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார், 20, சிலம்பரசன், 24, ஆகாஷ், 22, பிரேம்குமார், 20, ஆகியோரை கைது செய்தனர். கைதான, 9 பேரும் பழைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.