UPDATED : ஜூலை 09, 2024 10:29 AM
ADDED : ஜூலை 09, 2024 12:39 AM

சேலையூர் : சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 71. நேற்று மதியம், வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று, சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
எதிரே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், விஜயலட்சுமி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து, மின்னல் வேகத்தில் தப்பினார்.
சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.