ADDED : ஜூலை 31, 2024 12:05 AM
சென்னை, கோயம்பேடு மேம்பாலத்திற்கு அருகில் பிரதான குடிநீர் குழாயுடன், செம்பரம்பாக்கம் குடிநீர் திட்ட குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், இன்றும் நாளையும், அம்பத்துார் மண்டலத்திற்கு உட்பட்ட முகப்பேர் கிழக்கு, மேற்கு, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், பாடி, திருமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு, குழாய்கள் வழியாக வினியோகிக்கும் குடிநீர் நிறுத்தப்படும்.
அவசர தேவைக்கு, லாரி குடிநீர் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இணைப்பு இல்லாத மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு, லாரி குடிநீர் வழங்கப்படும். இதற்கு, 044- - 4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.