/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.1.70 கோடி மோசடி வாலிபர்கள் இருவர் சிக்கினர் ரூ.1.70 கோடி மோசடி வாலிபர்கள் இருவர் சிக்கினர்
ரூ.1.70 கோடி மோசடி வாலிபர்கள் இருவர் சிக்கினர்
ரூ.1.70 கோடி மோசடி வாலிபர்கள் இருவர் சிக்கினர்
ரூ.1.70 கோடி மோசடி வாலிபர்கள் இருவர் சிக்கினர்
ADDED : ஜூலை 21, 2024 02:37 AM

சென்னை:சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
சமூக வலைதளத்தில் வந்த 'ஆன்லைன்' முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்தேன். அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்ததில், 'வாட்ஸாப்' குழு ஒன்றில் இணைத்தனர்.
மொபைல் போன் செயலி ஒன்றின் 'லிங்' அனுப்பி, அவற்றில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறினர்.
இதை உண்மை என நம்பி, பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து, 1.70 கோடி ரூபாய் வரை செலுத்தினேன். செலுத்திய பணம் முதலீடு செய்யப்பட்டது போலவும், அதிக லாபம் வந்தது போலவும் காண்பித்தனர்.
பணத்தை எடுக்க முற்பட்டபோது, வெவ்வேறு காரணங்கள் கூறி மேலும் பணம் கேட்டு வற்புறுத்தினர். அதன்பின் தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.
சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருவள்ளூரைச் சேர்ந்த குணசீலன், 25, இளையகுமார், 27, ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய, ஐந்து மொபைல் போன்கள், நான்கு ஆதார் கார்டுகள், ஒன்பது ஏ.டி.எம்., கார்டுகள், வங்கி காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.