Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பட்ஜெட்டை கண்டித்து நேற்றும் மறியல் கம்யூ., கட்சியினர் 158 பேர் கைது என்ன போராட்டம்? எதோ அமெரிக்கா பட்ஜெட்டை எதிர்த்தது போல இருக்கு

பட்ஜெட்டை கண்டித்து நேற்றும் மறியல் கம்யூ., கட்சியினர் 158 பேர் கைது என்ன போராட்டம்? எதோ அமெரிக்கா பட்ஜெட்டை எதிர்த்தது போல இருக்கு

ADDED : ஆக 02, 2024 12:30 AM

Google News
Latest Tamil News
சென்னை மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல், பாரபட்சம் காட்டும் பா.ஜ., அரசை கண்டித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நேற்று, சாலை மறியல் போராட்டம் நடந்தது.

கிண்டி ரயில் நிலையம் எதிரே உள்ள, ஆலந்துார் சாலையில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு, மார்க்.கம்யூ., கட்சி மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், தலைமை வகித்தார்.

இந்திய கம்யூ., கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ரவீந்திரநாத் உட்பட பலர் பங்கேற்று, கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அனைவரும், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 48 பெண்கள் உட்பட, 250 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உட்பட பல இடங்களிலும் கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us