/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.100 கோடி கடன் தருவதாக ஆசைகாட்டி தொழிலதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி கும்பல் தலைவன் கைது ரூ.100 கோடி கடன் தருவதாக ஆசைகாட்டி தொழிலதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி கும்பல் தலைவன் கைது
ரூ.100 கோடி கடன் தருவதாக ஆசைகாட்டி தொழிலதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி கும்பல் தலைவன் கைது
ரூ.100 கோடி கடன் தருவதாக ஆசைகாட்டி தொழிலதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி கும்பல் தலைவன் கைது
ரூ.100 கோடி கடன் தருவதாக ஆசைகாட்டி தொழிலதிபரிடம் ரூ. 2 கோடி மோசடி கும்பல் தலைவன் கைது
ADDED : ஜூலை 03, 2024 12:14 AM

சென்னை, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரிடம், 100 கோடி ரூபாய் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இரண்டு கோடி ரூபாய் முன்பணம் பெற்று மோசடி செய்த மோசடி கும்பல் தலைவனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த சனிவரப்பு வெங்கடசிவரெட்டி என்ற தொழிலதிபர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் கூறியிருந்ததாவது:
சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் முகமது தாவூத் கான், 100 கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி முன் பணமாக, இரண்டு கோடி ரூபாய் வாங்கினார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி கடன் தொகையையோ, முன்பணத்தையோ திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டனர். உரிய நடவடிக்கை எடுத்து முன்பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். மோசடி கும்பலின் தலைவனான முகமது தாவூத் கானை, நேற்று முன்தினம் ராயப்பேட்டையில் உள்ள பிரபல மாலில், தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து, 'ஸ்கோடா' சொகுசு கார், நான்கு விலை உயர்ந்த மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் குறித்து
தனிப்படை ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது:
கைது செய்யப்பட்ட முகமது தாவூத் கான் என்பவர், பி.இ.,படித்துள்ளார். அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில், நான்கு வழக்குகள், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவில் இரண்டு வழக்குகள், மகராஷ்ட்ரா மாநிலத்தில் ஆறு வழக்குகள், டில்லியில் இரண்டு வழக்குகள் உள்ளன.
மோசடி வழக்கில், 2018 ல் புனேயில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின், தலைமறைவானவர் தற்போது தான் சென்னையில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. முகமது தாவூத் கானுக்கு பேச்சுத்திறமை அதிகம். முதலில் ஒருவரது ஆசையை துாண்டிவிட்டு, பின் அவரிடம் பணத்தை மோசடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவரைப் பிடிக்க, 40 மொபைல் எண்களை ஆய்வு செய்தோம். அவர் பயன்படுத்தி வந்த 'பென்ஸ்' கார் பதிவெண் கிடைத்தது. அந்த காரை வாங்கிய விற்பனை நிலையத்தில், அவருடைய ஆவணங்களை சேகரித்தோம். இதற்கிடையே, அந்த காரை, வேறொருவருக்கு அவர் விற்றுவிட்டார். அதற்கு பின், அவர் ஸ்கோடா கார் வாங்கிய விபரம் தெரியவந்தது. அந்த காரின் எண்ணை கண்டுபிடித்து, முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணித்தோம்.
இதில் அடையாறு பகுதியில் அந்த காரின் நடமாட்டம் தெரியவந்தது. காரை பின் தொடர்ந்து ராயப்பேட்டை மாலில், முகமது தாவூத் கானை கைது செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.