/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமிக்கு ஆபாச படம் காட்டி அத்துமீறியவருக்கு '10 ஆண்டு' சிறுமிக்கு ஆபாச படம் காட்டி அத்துமீறியவருக்கு '10 ஆண்டு'
சிறுமிக்கு ஆபாச படம் காட்டி அத்துமீறியவருக்கு '10 ஆண்டு'
சிறுமிக்கு ஆபாச படம் காட்டி அத்துமீறியவருக்கு '10 ஆண்டு'
சிறுமிக்கு ஆபாச படம் காட்டி அத்துமீறியவருக்கு '10 ஆண்டு'
ADDED : ஜூன் 01, 2024 12:15 AM
சென்னை, சென்னை, எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது மகள், அவரது பாட்டி மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார்.
கடந்த, 2014 மே 18ல், வீட்டில் இருந்த சிறுமியை, காசிமேடு பகுதியில் வசிக்கும் 51 வயதான நபர், 'டிவி'யில் ஆபாச படம் காண்பித்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அவ்வப்போது, வீட்டுக்கு சிறுமியை அழைத்து வந்தும் சீண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரது புகாரின்படி, ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கை, நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
நீதிபதி, 'குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 35,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
'மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.